காங்கோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு நகரமான கோமாவிலிருந்து 17 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் வடக்கு கிவு மாகாணத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 17 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், விமான விபத்து குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காங்கோ நாட்டில் அடிக்கடி விமான விபத்து நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்நாட்டில் மோசமான பராமரிப்பு மற்றும் விமான பாதுகாப்பு குறைபாடு அதிக அளவில் இருப்பதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.