சோதனை முயற்சியாகத் தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சோதனை தோல்வி அடைந்துள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்படும் நிலையில், அது முதல் தற்போது வரை கொரோனாவுக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிதாக உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை, 6 ரீசஸ் குரங்குகளுக்கு செலுத்தினர்.

ஆனால், அந்த 6 குரங்குகளுக்கும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

குறிப்பாக, தடுப்பூசி போடப்பட்ட 6 குரங்குகளையும் சோதித்தபோது, தடுப்பூசி போடப்படாத மற்ற 3 குரங்குகளின் மூக்கில் எவ்வளவு கொரோனா வைரஸ் இருந்ததோ, அதே அளவு தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் மூக்கிலும் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், 90 மில்லியன் பவுண்டுகள் செலவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, கொரோனாவைத் தடுக்காமல் போகலாம் என்பதையும், ஆராய்ச்சியாளர்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

மேலும், தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் உடலில் உள்ள வைரசின் அளவுக்கும், தடுப்பூசி போடப்படாத குரங்குகளின் உடலில் உள்ள வைரசின் அளவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், டாக்டர் வில்லியம் ஹசெல்டின் கவலைத் தெரிவித்துள்ளார்.