இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தைத் தாண்டி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 496 ஆக அதிகரித்துள்ளது.

பேயை போலவே இந்தியாவை மிரட்டி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இதனால், பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதனிடையே, இந்திய கடற்படையைச் சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாக்பூரில் மட்டும் இதுவரை 63 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கு, இதுவரை 12 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 100 யை தாண்டியது உள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவானி கோரப் பிடியில் இதுவரை 3,320 பேர் சிக்கி உள்ளனர். அங்க இதுவரை 201 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக டெல்லியில் 1707 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 அக உயர்ந்துள்ளது.

புதிதாக இந்தியா வந்த ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

ராஜஸ்தானில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலி எண்ணிக்கை தற்போது 19 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 76 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,629 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 496 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல், இந்தியா முழுவதும் இதுவரை 1992 பேர், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.