மனைவியுடன் சண்டை போட்டு ஆணுறுப்பை தனக்குத்தானே கணவன் வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மனோகரன், கடந்த வருடம் சரிதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் நடந்தது முதல், தினமும் குடித்து விட்டு வரும் மனோகரன், வீட்டிற்கு வந்து சரிதாவை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

மனோகரனின் குடிப்பழக்கத்தால், கணவன் - மனைக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ள நிலையில், சரிதா கோபித்துக்கொண்டு, தனது தயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த மனோகரன், குடித்துவிட்டு கத்தியுடன் மனைவி வீட்டிற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, மனைவியின் பக்கத்து வீட்டில் உள்ள ராகவேந்தர், மனோகரனை அமைதிப்படுத்தி, அவரை திரும்பிப் போகும்படி எச்சரித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த மனோகரன், கத்தியால் அவரை குத்துவதற்காக, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, கத்தி அவருடைய ஆண் உறுப்பில் தவறுதலாகப் பட்டு, பதம் பார்த்துள்ளது. இதில், அவருக்கு அங்கிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட, அதிக அளவில் வெளியேறி உள்ளது.

இதனையடுத்து, அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, குடிபோதையில் தனக்குத்தானே ஆணுறுப்பை வெட்டி கணவன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.