முஷாபர்நகரில் 15 வயது பள்ளி மாணவியைக் கடத்தி 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, செல்பி எடுத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணகியும், சீதையும் வாழ்ந்த இந்த நாட்டில்தான் பெண்கள் இப்போது நொந்து சாகிறார்கள். ராமனை காட்டிலும், இராவணன்கள் தான் இங்கே அதிகமாக இருக்கிறார்களோ என்று சந்தேகமெல்லாம் இதுபோன்ற சம்பவங்களால், சந்தேகப்பட வைக்கிறது.

பீகார் மாநிலம் முஷாபர் நகரில் 9 ஆம் தேதி, 15 வயது பள்ளி மாணவி ஒருவர், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பள்ளியிலிருந்து அவர் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக டெம்போவில் வந்த 3 இளைஞர்கள், மாணவியிடம் பேச்சுக் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு ஊர் பெயரைச் சொல்லி, அந்த வழியாகத்தான் செல்கிறோம் என்றும், வீட்டு வாசலில் இறக்கி விடுகிறோம் என்று கூறி, மாணவியை தங்கள் டெம்போவில் ஏற்றி உள்ளனர்.

அந்த இளைஞர்களின் வார்த்தைகளை நம்பி மாணவி வாகனத்தில் ஏறியுள்ளார். இதையடுத்து, அந்த 3 பேரும் டெம்போவிலேயே, அந்த மாணவியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடைசியாக, அந்த பெண்ணின் ஆடைகள் இன்றி நிற்க வைத்து, அந்த 3 பேரும், அந்த மாணவியுடன் சேர்ந்து, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து வெளியே சொன்னால், புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டி, மாணவியை விடுவித்துள்ளனர்.

இதனையடுத்து, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறிய மாணவி, அங்குள்ள முஷாபர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.