தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல், 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31 ஆம் ஆதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள, இதனையடுத்து, ஊரடங்கு முடிந்த மறுநாளே ஜூன் 1 ஆம் தேதியே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழகத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, இன்று காலை முதல் முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது” குறிப்பிட்டார்.

அதன்படி, “ஜூன் 1 ஆம் தேதிக்குப் பதிலாக 15 ஆம் தேதிக்குத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும்” அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

“ஜூன் 15 ஆம் தேதி தேர்வு தொடங்கி 25 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான அட்டவணையையும் அவர் வெளியிட்டார்.

அதன்படி,

ஜூன் 15 ஆம் தேதி - தமிழ்,
ஜூன் 17 ஆம் தேதி - ஆங்கிலம்,
ஜூன் 19 ஆம் தேதி - கணிதம்
ஜூன் 22 ஆம் தேதி - அறிவியல்,
ஜூன் 24 ஆம் தேதி - சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்

அதேபோல், “11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 16 ஆம் முதல் நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.