உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு 2.51 கோடியாக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 8,46,734 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,42,733 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,498 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 948 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,13,933 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 64,935 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,65,302 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.81 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 76.47 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.15 லட்சத்தினை கடந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 61,39,078 பேரும், பிரேசிலில் 38,46,965 பேரும், இந்தியாவில் 35,39,712 பேரும், ரஷியாவில் 9,85,346 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர்.