ஸோயா ஃபாக்டர் படத்தின் லக்கி சார்ம் பாடல் வீடியோ இதோ !
By Sakthi Priyan | Galatta | September 03, 2019 16:00 PM IST
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சோனம் கபூர். நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து அசத்தும் படம் தான் இந்த ஸோயா ஃபாக்டர். அபிஷக் ஷர்மா இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
ஜீ இசை நிறுவனம் இசை பணிகளை மேற்கொள்கிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், துல்கர் சல்மான் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஈர்த்து வருகிறது. இதனைத்தொடர்ந்து லக்கி சார்ம் பாடல் வீடியோ வெளியானது. ரகுவீர் யாதவ் மற்றும் ஷங்கர் மஹாதேவன் பாடியுள்ளனர். அமிதாப் பட்டாச்சார்யா பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
நடிகர் துல்கர் கைவசம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் போன்ற படங்கள் உள்ளது. இறுதியாக மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.