மலையாளத் திரையுலகில் நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான “வெருதே ஒரு பாரியா” திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ்.தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தமிழில் வெளிவந்த “குருவி”,”ஜில்லா” திரைப்படங்களில் தளபதி விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் போராளி, நவீன சரஸ்வதி சப்தம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியானார்.கடைசியாக தமிழில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைப்படத்தின் நடித்திருந்தார்
 
இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நுழைந்த நடிகை நிவேதா தாமஸ், நடிகர் நானியுடன் இணைந்து ஜென்டில்மேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை நிவேதா தாமஸ், கடைசியாக பின்க் திரைபடத்தின் தெலுங்கு ரீமேக்-ஆக நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த வக்கீல் சாப் திரைப்படத்தில் நடிகை அஞ்சலியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்களும் அரசாங்கமும் வலியுறுத்தி வரும் இந்த சூழலில் பொது மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசியின் மீது சிறிது பயத்திலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். இதையடுத்து பல முன்னணி பிரபலங்களும் அவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக பகிர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில் தென்னிந்திய இளம் கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை நிவேதா தாமஸ் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். அவர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவேதா தாமஸ்-ன் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.