ஹாலிவுட் திரையுலகின் சிறந்த படங்களில் ஒன்றான டெர்மினேட்டர் பட வரிசையில் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் என்ற படம் வரும் 2019 நவம்பர் 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

arnold

தற்போது டெட்போல் படத்தை இயக்கிய டீம் மில்லர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அர்னால்டு, லிண்டா, ஹாமில்டன், எட்வேட் பர்லங், மெக்கன்சி டேவிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

dialogue writer ashok writerashok

தமிழில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ் வசனங்களை எழுத்தாளர் அஷோக் எழுதியுள்ளார். ஏற்கனவே இவர் எழுதிய கே.ஜி.எஃப் சேப்டர் 1 வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நாகராஜ் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.