ராஷ்மிகா மந்தனாவின் வாட்டே பியூட்டி வீடியோ பாடல் !
By Aravind Selvam | Galatta | March 16, 2020 17:21 PM IST
கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
பொங்கலையொட்டி தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நிதின் நாயகனாக நடித்திருந்த பீஷ்மா படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான வாட்டே பியூட்டி என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்