கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Ramya

இந்நிலையில் VJ ரம்யா டிக்டாக் செய்து அசத்தியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற ரொமான்டிக் வசனத்தை டிக்டாக் செய்துள்ளார் ரம்யா. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Ramya

XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ரம்யா. உடற்பயிற்சி தவிர்த்து ஆடல் பாடல் என அசத்தி வரும் ரம்யாவை பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

@actorramya

Thinam Oru Dialogue Varisayil Indru ##thaanaserndhakootam ##KeerthySureshDialogue

♬ original sound - marranpraveen