அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் எஃப்.ஐ.ஆர். சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகஜால கில்லாடி. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

vishnuvishal

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை சுஜாதா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது, தற்போது விஷ்ணு விஷாலே இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவல் நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது.

vishnuvishal

vishnuvishal

இதைத் தொடர்ந்து விக்ராந்துடன் நடிக்கும் புதிய படம், இன்று நேற்று நாளை 2, ஜெர்ஸி தமிழ் ரீமேக், காடன், வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் படம் என பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் விஷ்ணு விஷால்.