தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு காடன், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களால் விருந்தளிக்கவுள்ளார் விஷ்ணு. 

VishnuVishal

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். 

VishnuVishal VishnuVishal

அதில் எஃப்.ஐ.ஆர் ஷூட்டிங் நாட்களில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, நாம் அனைவரும் மைதானத்தில் பேட்டிங் செய்ய காத்திருக்கிறோம். ஆனால் மைதானம் தயாராக இருக்கவேண்டும். ஆடுகளம் பாதுகாப்பாக அமைய வேண்டும். அதை நிபுணர்களே தீர்மானிக்கட்டும். வீட்டிலேயே பத்திரமாக இருங்கள். அரசு சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என கிரிக்கெட் வாயிலாக பதிவு செய்துள்ளார்.