தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன்  திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை நடிகர் விஷால் இயக்கி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கவுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் . சில வாரங்களுக்கு முன்பு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு முழுவீங்சில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் மார்க் ஆண்டனி படத்தில் SJ.சூர்யா மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி.இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் உடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் இளையதிலகம் பிரபு நடித்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் லத்தி திரைப்படம் வெளிவரவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு லத்தி படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், தற்போது லத்தி படத்தின் அதிரடியான டீசர் வெளியானது. அந்த டீசர் இதோ…