விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஆபீஸ்.இந்த தொடரில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் பவித்ரா ஜனனி.இதனை தொடர்ந்து ராஜா ராணி,சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து அசத்தினார் பவித்ரா.

தொடர்ந்து சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் பவித்ரா ஜனனி.இடையில் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தினார் பவித்ரா ஜனனி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பவித்ரா.

திரவியம் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடர் 700 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் பவித்ரா.

இவர் நடித்து வரும் ஈரமான ரோஜாவே தொடர் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று வரும் நிலையில் தற்போது இவர் ஹீரோயினாக நடித்துள்ள தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த தொடரில் ஹீரோவாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்த வினோத் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த ப்ரோமோ வீடியோ சில ரசிகர்களிடம் சில விமர்சங்கங்களை பெற்று வருகிறது.