திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. 

அதன் பின் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போட பட்டதால் வலிமை படத்தின் ஷுட்டிங் தடைபட்டு இருக்கிறது. இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் ஷுட்டிங் துவங்க முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது. RX 100 திரைப்பட புகழ் கார்த்திகேயா, வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி அடிக்கடி வருவதை காண முடிகிறது. படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. 

வலிமை திரைப்படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

இந்நிலையில், அஜித்தின் ஆழ்வார் திரைப்படத்தின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் இடம்பெற்ற ஓர் காட்சியில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தோன்றியிருந்தது பார்வையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், தல அஜித் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய துவங்கிவிட்டனர். 

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமாவதற்கு முன்பு பல குறும்படங்களில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்று சமீபத்தில் வைரலானது. அதே போல் இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. 2007-ம் ஆண்டு அஜித், அசின், விவேக் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தை செல்லா இயக்கியிருந்தார். 

கடின உழைப்பால் மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக உருவெடுத்துள்ளார் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து புது ஜானரில் குட்டி லவ் ஸ்டோரி எனும் ஹேங்கவுட் படத்தில் நடித்து வருகிறார்.