இசையமைப்பாளர், நடிகர் & தயாரிப்பாளர் என தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் விஜய் ஆண்டனி அவர்கள் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக தயாராகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கிறார்.

முன்னதாக விஜய் ஆண்டனியின் நடிப்பில் காக்கி, தமிழரசன், அக்னிசிறகுகள் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக திரைக்கு வரவுள்ள நிலையில், தொடர்ந்து இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை ஆகிய திரைப்படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ரத்தம். விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகைகள் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பொலிட்டிகல் க்ரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் ரத்தம் திரைப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் என்.கண்ணன் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது ரத்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அசத்தலான ரத்தம் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ… 
 

Here's the #RathamFirstLook #ரத்தம்🔥@csamudhan @gopiamar @editorsuresh @Mahima_Nambiar @nanditasweta @nambessan_ramya @FvInfiniti @bKamalBohra @Dhananjayang @lalithagd @pradeepfab @panbohra @Bhashyasree @DoneChannel1 @gskmedia_pr @CtcMediaboy pic.twitter.com/1jWFI3Mv6d

— vijayantony (@vijayantony) July 24, 2022