தமிழில் மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் நவீன். தனது முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் கவனிக்க வைத்தார். குறிப்பாக மூடர்கூடம் திரைப்படத்தின் வசனங்கள் அனத்தும் அனைவராலும் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இயக்குனர் நவீன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் அக்னி சிறகுகள். முன்னணி நடிகரான அருண்விஜய் மற்றும் இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி இணைந்து நடித்திருக்கும் அக்னி சிறகுகள் திரைப்படத்தை நவீன் எழுதி இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.சிவா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் நடிகர்கள் அருண்விஜய் மற்றும் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகை அக்ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், ரெய்மா சென் சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான நேற்று அக்னி சிறகுகள் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. 

ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் அக்னிசிறகுகள் திரைப்படத்தில் மிரட்டலான லுக்கில் விஜய் ஆண்டனி இருக்கும் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது விஜய் ஆண்டனியின் இந்த டிரன்ஸ்பாமேஷன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புதிய போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.