பொதுவாக இயக்குனர்களின் பெயர் பலகை வரும்போது தான் ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் படம் முடிந்தவுடனும் ப்ளூப்பர் காட்சிகளால் ரசிகர்களை திரையரங்கில் கட்டி போடும் வித்தை தெரிந்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. 

venkatprabhu

இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி நெருங்கிய திரை வட்டாரத்திலிருந்து செய்தி வெளியானது. வெங்கட் பிரபு சொன்ன கதையின் ஒன்லைன் பிடித்து போகவே லாரன்ஸ் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. 

venkatprabhu

முனி, காஞ்சனா போன்ற சூப்பர் ஹிட் காமெடி படங்களை தந்த ராகவா லாரன்ஸ் முன்னணி இயக்குனரின் திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெங்கட்பிரபு ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.