கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகின்றன. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், தியேட்டர்கள் தயாராக சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். 

RK Nagar

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

VenkatPrabhu

சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். லாக்டவுன் முடிந்த பிறகு சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் STR வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.