தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். சமீபத்தில் மக்கள் செல்வி என்ற பெயரை ரசிகர்களிடமிருந்து பெற்றார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு நீயா 2 மற்றும் கன்னி ராசி போன்ற படங்கள் வெளியானது. 

varalakshmisarathkumar velvetnagaram

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் வெல்வெட் நகரம். மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, அருவி படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. 

varalakshmi velvetnagaram

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி ஈர்த்து வருகிறது. வரலக்ஷ்மி கைவசம் சேஸிங், டேனி போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.