தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று மக்கள் செல்வியாக உயர்ந்து நிற்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெல்வெட் நகரம் படம் வெளியானது. இதைத்தொடர்ந்து டேனி, சேஸிங் போன்ற படங்கள் வரலக்ஷ்மி கைவசம் உள்ளது. 

Varalakshmi Sarathkumar About Missing IPL Matches

நாடு முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றுவது மூலம் தான் பரவலை தடுக்க இயலும். இப்படிப்பட்ட சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் சினிமா, கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் தவிக்கின்றனர். குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் போனது. 

Varalakshmi Sarathkumar About Missing IPL Matches

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஐபிஎல் போட்டிகளை மிஸ் செய்வதாக கூறி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் வரலக்ஷ்மி. அதற்கு பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ், சூரியவம்சம் படத்தில் சின்ராசு கெட்டப்பில் இருக்கும் சரத்குமார் புகைப்படத்தை கொண்டு ரிப்ளை செய்துள்ளது.