நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

Vaibhav Vani Bhojan Lockup Rights Acquired Sun TV

ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு லாக்கப் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Vaibhav Vani Bhojan Lockup Rights Acquired Sun TV

இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.