தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்.

vaanamkottatum

இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை தனா இயக்கிவருகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

radhikasarathkumar

radhikasarathkumar

சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது படத்தின் டப்பிங் பணிகளை இன்றோடு முடித்தார் ராதிகா. இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.