தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற மாபெரும் கலைஞன் உலக நாயகன் கமல்ஹாசன். தன் கலையின் மீது இருக்கும் தீரா மோகத்தால் தொடர்ந்து ஒவ்வொரு படத்திற்கும் புதுமைகளை புகுத்தி ரசிகர்களின் ரசனையை வளர்க்கும் திரை விவசாயி உலகநாயகன் கமல்ஹாசன்.

மாநகரம்  படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பிறகு கைதி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக தளபதி விஜய்யுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான மாஸ்டர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக  உலகநாயகன் கமலஹாசனுடன் கைகோர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , கமல்ஹாசனின் ராஜ்கமல்  பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். 

முன்னதாக இதன் டைட்டிலை அறிவிக்கும் டீஸர் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பரபரப்பாக விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். 

அதன்படி, யுத்தத்தால் அதோ அதோ விடியுது... சத்தத்தால் அராஜகம் அழியுது...ரத்தத்தால் அதோ தலை உருளுது...சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது...துடிக்குது புஜம்...ஜெயிப்பது நிஜம்... என முன்பு வெளியான விக்ரம் படத்தின் பாடலை குறிப்பிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.