தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதிராவ் ஹய்தாரி நாயகியாக நடிக்கிறார். புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்குகிறார்.

thuklak

இயக்குனரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி நானும் ரவுடி தான் படம் மக்களை மிகவும் கவர்ந்த கூட்டணியாக அமைந்தது. தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியை இணைந்துள்ளத.

suntv

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இப்படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார். பிரேம்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.