தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்துள்ளனர். தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார்.

தி லெஜண்ட் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா ஹீரோயினாக நடித்துள்ளார்.மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்,பிரபு,யோகி பாபு,ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஜூலை 28ஆம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸாகியுள்ளது.பெரிய படங்களுக்கு நிகரான ஓப்பனிங்கை இந்த படம் பெற்றுள்ளது.ரசிகர்கள் பலரும் இந்த படத்தினை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் வரவேற்பு குறித்தும் ரசிகர்களின் அன்பு குறித்தும் நெகிழ்ந்த படத்தின் நாயகன் லெஜெண்ட் சரவணன் அவர்களின் விமர்சனம் மற்றும் படத்தின் புது அதிரடி ப்ரோமோ ஒன்றும் இணைந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.