தலைவி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் !
By Sakthi Priyan | Galatta | November 11, 2019 12:23 PM IST

மதராசபட்டினம், கிரீடம், தாண்டவம், சைவம் போன்ற சீரான படைப்புகளை தந்தவர் இயக்குனர் விஜய். இறுதியாக பிரபுதேவா வைத்து தேவி 2 படத்தை இயக்கினார். தற்போது தலைவி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.