தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் இதன் முதற் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

rajinikanth

இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா முதன் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்பட்டு வருகிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

rajinikanth

படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ் மற்றும் குஷ்பு இணைந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ செய்தி சன் பிக்சர்ஸ் வாயிலாக வெளியானது. தற்போது இந்த படம் 2020 ஆயுதபூஜைக்கு வெளியாகும் என்ற தகவல் கலாட்டா செவிகளுக்கு எட்டியது. இச்செய்தியை சூப்பர்ஸ்டார் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறது கலாட்டா.