போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள படம் வலிமை. இதன் பூஜை அண்மையில் நடைபெற்றது. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து H.வினோத் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு வரும் டிசம்பர் 20-ம் தேதி டெல்லியில் துவங்குகிறது. யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ajithboneykapoor

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் தல அஜித் பணிபுரியவிருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் படு வேகமாக பரவத்துவங்கியது.

valimai ajith

இதுகுறித்து விசாரிக்கையில் இச்செய்தி வதந்தி என நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. முருகதாஸ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் பணிபுரிந்து வருகிறார். அஜித் நடித்த தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக திரையில் அறிமுகமானவர் முருகதாஸ். இச்செய்தி உண்மையாக இருந்திருந்தால் 18 வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து பணிபுரிவதாக அமைந்திருக்கும்.