டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலிருந்து தமிழிசை சவுந்தரராஜன் வெளியேறி உள்ளார்.

பாஜக வின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்படுகிறார். அதன்படி வரும் 8 ஆம் தேதி, அவர் ஆளுநராகப் பதவி ஏற்க உள்ளார்.

Tamilisai

இந்நிலையில், பாஜகவின் தமிழ் மாநில தலைவர் பொறுப்பிலிருந்தும், பாஜக வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார். அத்துடன், பாஜக தலைவராக இருந்தபோது தமிழிசை சவுந்தரராஜன், அவரது டிவிட்டர் மற்றும் முகநூல் பதிவில், கட்சி சார்ந்த நிகழ்வுகள், பேட்டிகள், விளம்பரங்களைப் பதிவிட்டு வந்தார்.

ஒவ்வொரு பதிவுக்கு வரும் எதிர் விமர்சனங்களுக்கும், அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிலும் அளித்து வந்தார். இந்நிலையில், தெலுங்கானா ஆளுநராகத் தமிழிசை பதவி ஏற்க உள்ள நிலையில், இன்று டிவிட்டர், மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறினார்.