இந்திய சினிமாவின்  குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் டாப்ஸி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சபாஷ் மித்து. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ்-ன் பயோபிக் திரைப்படமாக தயாரான சபாஷ் மித்து திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார்

முன்னதாக தமிழில் ஜன கண மன மற்றும் ஏலியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை டாப்ஸி தற்போது தயாரிப்பாளராகவும் இயக்குனர் அஜய் பால் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் ப்ளர் திரைப்படத்தை ஸ்டூடியோ உடன் இணைந்து தனது அவுட் சைடர்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து நடிக்கிறார்.

 இந்த வரிசையில் அடுத்ததாக டாப்ஸி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் தோ பாரா. இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் தோ பாரா திரைப்படத்தில் டாப்ஸியுடன் இணைந்து பாவைலி குலாட்டி, நாஸர் மற்றும் ராகுல் பட் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த மிரேஜ் திரைப்படத்தின் ரீமேக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் தோ பாரா திரைப்படத்திற்கு சில்வர்ஸ்டர் போன்செகா ஒளிப்பதிவு செய்துள்ளார். தோ பாரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தோ பாரா திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. த்ரில்லான தோ பாரா படத்தின் ட்ரைலர் இதோ…