பாலிவுட் திரையுலகின் சிறந்த நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான சுஷாந்த் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் தவிர்த்து பிரபலங்களையும் இச்செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Sushant Singh Rajput Was Supposed To Get Married In November 2020

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும், லாக்டவுன் முடிந்த பிறகு குடும்பத்தார் பாட்னாவில் இருந்து மும்பைக்கு வர திட்டமிட்டதாகவும் அவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புட்டை மணக்கோலத்தில் பார்க்க காத்திருந்த குடும்பத்தார் இப்படி அவரை பிணமாக பார்த்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Sushant Singh Rajput Was Supposed To Get Married In November 2020

சுஷாந்த் முகேஷ் சப்ராவின் இயக்கத்தில் தில் பெச்சாரா படத்தில் நடித்து வந்தார். சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த அவரின் குடும்பத்தார் பாட்னாவில் இருந்து மும்பை வந்துள்ளனர். சுஷாந்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. இச்செய்தியை ஜீரணிக்க முடியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர் சுஷாந்த் ரசிகர்கள்.