இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார்.

suriya

sooraraipottru

முதல் லுக் போஸ்டரிலே விமானம் கொண்டுள்ளதால், படத்தின் முக்கிய காட்சிகளை இங்கு படமாக்கியிருக்கலாம் என்ற கருதப்படுகிறது. சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டது என தெரியவந்தது. படத்தில் நடிகர் சூர்யாவின் பெயர் நெடுமாறன் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

sooraraipottru

gvprakashkumar

தற்போது படத்தின் பின்னணி இசை பணிகளை துவங்கியதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ளார். படத்தின் ஓப்பனிங் காட்சிகளுக்கான இசை பணியில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.