காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.இதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் தயாராகவுள்ள அருவா மற்றும் வெற்றிமாறன் படங்களில் நடிக்கவுள்ளார்.

Suriya VaadiVaasal Works Started GV Prakash Kumar

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தை வி க்ரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இது இவர் இசையமைக்கும் 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya VaadiVaasal Works Started GV Prakash Kumar

இந்த படத்தின் டைட்டில் வாடிவாசல் என்ற தகவல் கிடைத்திருந்தது.தற்போது இந்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளதாக இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படத்தில் இசை மிகவும் ஸ்பெஷலாக இருக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.