பிரபல குணச்சித்திர நடிகையாக பலகோடி ரசிகர்களின் இதயங்களை வென்றவர் சுரேகா வாணி.தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து அசத்திய இவர், தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சுரேகா வாணி.

தெய்வ திருமகள்,காதலில் சொதப்புவது எப்படி,ஜில்லா,மெர்சல்,விஸ்வாசம்,மாஸ்டர் என்று பல முக்கிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சுரேகா வாணி.தெலுங்கு,தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் -நடித்துவிட்டு சுரேகா வாணிக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது கணவர் சுரேஷ் தேஜா 2019ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார் இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற ஒரு மகள் இருக்கிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் சுரேகா வாணி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

சமீபகாலமாக தனது மகள் சுப்ரிதாவுடன் இணைந்து சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார் சுரேகா அப்படி இவர்களது நடன வீடியோ சில வைரலாகி வந்தன.தற்போது சுரேகாவின் மகள் சுப்ரிதா தனது பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.