யோகிபாபுவுடன் இணைந்த சுனைனா ! ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
By Sakthi Priyan | Galatta | January 04, 2020 10:35 AM IST

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வெகு நாட்களுக்கு பிறகு அட்லீ இயக்கிய தெறி படத்தில் கௌரவ ரோலில் நடித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகி அசத்தின. சுனைனா நடிப்பில் தற்போது ட்ரிப் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இதை ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டார்.
யோகிபாபு மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.