தமிழ் திரைத்துறையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் STR. இவரது நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. அதன் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார் சிம்பு. 

str

தாய்லாந்து திரும்பியவர், கடந்த 6-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்தார். நாற்பது நாற்களாக விரதம் இருந்து வந்த நிலையில், நேற்று மாலையளவில் தனது சபரிமலை செல்லும் ஆன்மீக பயணத்தை தொடங்கினார்.

simbu

சபரிமலை ஆன்மீகப் பயணம் முடிந்தவுடன், மீண்டும் அவர் திரைத்துறையில் தனது வெற்றி பயணத்தை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.