வெப்சீரிஸில் கால் பதிக்கும் எஸ்.பி.சரண் !
By Sakthi Priyan | Galatta | January 04, 2020 14:00 PM IST
![வெப்சீரிஸில் கால் பதிக்கும் எஸ்.பி.சரண் ! - Tamil Movie Cinema News வெப்சீரிஸில் கால் பதிக்கும் எஸ்.பி.சரண் ! - Tamil Movie Cinema News](https://d1ydle56j7f53e.cloudfront.net/assets/news_images/weweewweiowe-JPG-7190.jpg)
இந்திய திரையுலகின் இசை ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் எஸ்.பி.சரண் பாடகராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். உன்னை சரணடைந்தேன், சரோஜா, வா குவாட்டர் கட்டிங் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமல்லாமல் மழை, சென்னை 28 உள்ளிட்ட படங்களை தயாரித்து, சிறந்த தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தவர்.
இவர் தயாரிப்பில் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சரண், அதிகாரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கவுள்ளார்.
இந்த படத்துக்கு கேபிள் ஷங்கர் திரைக்கதை வசனம் எழுதுகிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, தீனா தேவராஜன் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது.