தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது இயக்கத்தில் வெளியான கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. சென்ற வருடம் விஷாகனை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த அழகான தம்பதியை பல திரைப்பிரபலங்கள் வாழ்த்தினர். 

Soundarya Rajinikanth Celebrates Veds 5Th Birthday

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மகன் வேத் பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் போட்டோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அருகில் விஷாகன் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டிருக்கிறார். 1..2..3...4... எங்கள் மகனுக்கு 5 வயது ஆகிவிட்டது. உன்னை நாங்கள் தினமும் கொடாடுகிறோம். எங்கள் சிறிய ஏஞ்சலை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேத் என்று பதிவு செய்துள்ளார். 

Soundarya Rajinikanth Celebrates Veds 5Th Birthday

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். பிறந்தநாள், திருமணங்கள், வீட்டு விசேஷங்கள் என பல சுப நிகழ்ச்சிகள் எளிமையாகவே கொண்டாடப்படுகிறது.