தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மற்றும் நடிகர் SJ சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த இறைவி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. மெர்சல் மற்றும் மகேஷ் பாபு படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

sjsurya

சில நாட்களுக்கு முன்பு இவரது நடிப்பில் மான்ஸ்டர் திரைப்படம் ரிலீஸாகி ஹிட் ஆகியது. தற்போது மொழி, அபியும் நானும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குனர் ராதாமோகன் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

radhamohan

radhamohan

இன்று படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது என்ற தகவல் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கதிர் ஆர்ட் டைரக்ட்டராக பணிபுரியவுள்ளார். படத்தில் நாயகியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார். மான்ஸ்டர் படத்திலும் இவர் தான் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.