இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் மனிதன் இன்று பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசை நாயகனானாக மாறியுள்ளார்.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த இன்று நேற்று நாளை,இமைக்கா நொடிகள்,கதகளி என்று பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

இதற்கு இடையில் தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.சுந்தர் சி இந்த படத்தை தயாரிக்க.இந்த படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.நடிப்பதில் இறங்கினாலும் இசை மீது கொண்டுள்ள காதலை விடமால் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.தனது படங்களை தவிர மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் அட்டகாசமாக இசையமைத்து அசத்தி வந்தார் ஹிப்ஹாப் தமிழா.அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய இரண்டு படத்தில் நடித்துவருகிறார் ஹிப்ஹாப் தமிழா.

சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்குகிறார்.மாதுரி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தற்போது இந்த படத்தின் முதல் பாடலான சிவகுமாரின் பொண்டாட்டி பாடல் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.செம ரகளையான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.