தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது அயலான்,டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவர் பிறந்தநாள் நேற்று முன்தினம் முடிந்தது.

Sivakarthikeyan Thanks Fans Ayalaan Doctor FL

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ரவிக்குமார் இயக்கும் அயலான் மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கும் டாக்டர் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.இந்த போஸ்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Sivakarthikeyan Thanks Fans

தற்போது சிவகார்த்திகேயன் இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களுக்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி என்றும் பல இடங்களில் இருந்து தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்,பத்திரிகை நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.இந்த அன்பிற்கு நிகராக ஏதும் இல்லை உங்களை சந்தோஷ படுத்த நல்ல படங்களாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்