ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது. இந்த படத்தில் அரசியல் வாதியாக சில காட்சிகளில் நடித்தவர் நடிகர் அருண் அலெக்சாண்டர். 

bigil

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்திலும் அருண் அலெக்சாண்டர் நடித்திருந்தார். 

arunalexander

எங்க வீட்டு பிள்ளை படத்தின் வெற்றிக்கு பிறகு ரவிக்குமார் மற்றும் மித்ரன் இயக்கும் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதன் பின் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஓர் படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக நடிகர் அருண் அலெக்சாண்டர் கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தெரிவித்தார். 

nelsondhilipkumar