சாக்ஷியுடன் டப்ஸ்மாஷ் செய்யும் ஷெரின் ! வைரலாகும் வீடியோ
By Sakthi Priyan | Galatta | October 10, 2019 16:09 PM IST

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்றாவது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சாக்ஷி மற்றும் ஷெரின் தோழிகளாக இருந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் டப்ஸ்மாஷ் செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சாக்ஷி அவ்வா அவ்வா பாடல் பாடினார்.
இதை கவின் மற்றும் சாண்டி கிண்டலடித்தனர். அந்த பாட்டை மீண்டும் பாடி காண்பிக்கிறார் சாக்ஷி. ஒவ்வொரு பங்கேற்பாளர்களுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உள்ளது என்று கூறினால் மிகையாகாது.