தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார். 

thalapathyvijay Masteraudiolaunch

இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. அவ்விழாவில் தளபதி விஜய், ஷாந்தனு மற்றும் அனிருத்தை மேடைக்கு அழைத்து அற்புதமான ஆட்டம் போட்டார். 

shanthanu Shanthanu

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டரில், அந்நிகழ்வு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அப்பதிவில், கனவு நிஜமாகியது. எனது வேண்டுதலில் எப்போதும் நீ இருக்கிறாய் என சொன்னதற்கு நன்றி விஜய் அண்ணா. மேலும் என்னை நடனமாட மேடைக்கு அழைத்து, நான் உங்கள் பாடலுக்கு ஆடிய ஸ்டெப்பை ஆடியதற்கும் நன்றி. இதனால் தான் நீங்கள் மாஸ்டராகவும் இதயதளபதியாகவும் இருக்கிறார்கள். லவ் யூ அண்ணா என பதிவு செய்துள்ளார். வானம் கொட்டட்டும், மாஸ்டர் என தொடர்ந்து ஃபார்மில் இருக்கும் ஷாந்தனுவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.