தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை கொடுத்துவரும் இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் அடுத்த திரைப்படமாக தயாராகி வருகிறது இடி முழக்கம். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் இடிமுழக்கம் திரைப் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் உருவாகும் இடிமுழக்கம் படத்தில் இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக  நடைப்பெற்று வந்த இடிமுழக்கம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தையடுத்து இயக்குனர் சீனு ராமசாமி ஜீவி பிரகாஷ் குமார் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,

#இடிமுழக்கம் முதற்கட்ட படப்பிடிப்பு  முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு  தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு.

என பதிவிட்டுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் இடிமுழக்கம் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.