தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர். தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படைப்புகளை அளித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார். 

Seenu Ramasamy About Functioning Of Wine Shops

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு, கடைகளின் முன்புறம் ஆண்கள் பெண்கள் பாகுபாடின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கிச் செல்வது வருத்தத்தை அளிக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Seenu Ramasamy About Functioning Of Wine Shops

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் சாம்பல் பூத்து உடல் சிறுத்து, நீளமான வரிசையில் நிற்கிறார்கள்...என் நோய் தொற்றுடை நாடே என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.