தளபதி விஜய் நடிப்பில் கில்லி எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் தரணி. இவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஒஸ்தி. சல்மான் கான் நடித்த தபங் படத்தின் ரீமேக்கான இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. 

osthi

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. 
இதை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர் என்றும் வதந்தி கிளம்பியது. இதுகுறித்து சத்யஜோதி தியாகராஜனிடம் கேட்டபோது இச்செய்தி முற்றிலும் தவறானது, இப்போதைக்கு அதுபோன்ற யோசனை ஏதும் இல்லை என்று எடுத்துரைத்தார். அஜித்தின் விஸ்வாசம் வெற்றிக்கு பிறகு தனுஷின்  பட்டாஸ் திரைப்படத்தை தயாரித்தனர். 

sathyajothithyagarajan

ஜமீல் இயக்கத்தில் மஹா படத்திலிருந்து எஸ்.டி.ஆர் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி அசத்தியது. பொங்கல் முடிந்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் எஸ்.டி.ஆர்.